Sunday, December 18, 2016

டிவி சீரியலாக வரும் பாகுபலி


டிவி சீரியலாக வரும் பாகுபலி



19 டிச,2016 - 09:35 IST






எழுத்தின் அளவு:








இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‛ பாகுபலி' படம் உலக அளவில் வசூலை குவித்தது . இதைத்தொடர்ந்து பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. தற்போது பாகுபலி படம் தொலைக்காட்சி தொடராக வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


‛பாகுபலி- 2' படம் வசூலில் நிச்சயம் சாதனை படைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் பாகுபலி படத்தை தொலைக்காட்சி தொடராக எடுத்து வெளியிட திட்டமிட்டு இருக்கிறது படக்குழு . இது குறித்து பாகுபலி பட தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா கூறுகையில், பாகுபலியை டிவி தொடராக வெளியிடுவது குறித்து பணிகள் நடந்து வருகிறது , அதை யார் ஒளிபரப்பப் போகிறார்கள் உள்ளிட்ட எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறினார். ‛பாகுபலி -2' படம் ரிலீஸூக்கு பிறகு தொலைக்காட்சி தொடராக வரும் என்றும் கூறினார் .

0 comments:

Post a Comment