அஜித்தின் 57 வது பட தலைப்பு விவேகம்; வெளியானது பர்ஸ்ட் லுக்
02 பிப்,2017 - 00:14 IST
நடிகர் அஜித்தின் 57 வது படத்திற்கு விவேகம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நள்ளிரவு 12.01 க்கு வெளியானது.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் தன்னுடைய 57வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.
அஜித் நடித்து வெளிவந்த வீரம், வேதாளம் ஆகிய படங்கள் ஆங்கிலத்தில் v என்று தொடங்கி பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. இந்நிலையில், சர்வதேச அளவிலான திரில்லர் க்ரைம் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் அவரின் 57 வது படத்திற்கும் விவேகம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நள்ளிரவு 12.01 க்கு வெளியானது.சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் பேனரில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்குமார், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் நடித்துள்ளனர். இப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக்கில் அஜித் சிக்ஸ் பேக்குடன் சட்டை இல்லாமல் ஆர்மி பேண்ட் அணிந்து காட்சியளிக்கிறார். அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்பார்த்தது போல் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் ஏகோபித்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
0 comments:
Post a Comment