சின்னத்திரை: உருவாகிறது ஒரு மணி நேர தொடர்கள்
04 பிப்,2017 - 10:42 IST
பொழுதுபோக்கு சேனல்களில் திரைப்படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பது தொடர்கள். வாரக் கடைசியில் ஒளிபரப்பாகும் சிறப்பு தொடர்கள் மட்டுமே ஒரு எபிசோட் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும், திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் தொடர்கள் 30 நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பாகும், இதில் டைட்டில், விளம்பர நேரங்கள் 5 நிமிடம் போக ஒரு தொடரின் நீளம் 25 நிமிடங்கள்தான்.
ஆனால் இனி வரும் காலங்களில் இந்த நிலை மாற இருக்கிறது. இனி வார நாட்களில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த டிரண்டை தொடங்கி வைத்திருக்கிறது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாப்பிள்ளை தொடர். இந்த தொடர் தற்போது ஒரு எபிசோட் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது.
சரவணன், மீனாட்சியில் காதலன், காதலியாக நடித்து, பின்னர் நிஜகாதலர்களாகி, திருமணமும் செய்து கொண்ட செந்தில்&ஸ்ரீஜா ஜோடி இதில் நடிக்கிறார்கள். மாப்பிள்ளை கதைப்படி இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இருவருக்கு பின்னாலும் ஒரு பெரிய உண்மை மறைந்திருக்கிறது. அதை மறைத்து சந்தோஷமாக வாழ்கிறார்கள். ஒருவர் உண்மை மற்றவருக்கு தெரிந்து விடக்கூடாதே என்கிற பதட்டம் இருவருக்கும் இருக்கும்... இப்படி போகிற கதை.
மாப்பிள்ளை தொடரின் 1 மணி நேர எபிசோட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும், இது தொடர்ந்தால் மற்ற தொடர்களையும் ஒரு மணிநேர தொடராக மாற்ற வாய்ப்பிருப்பதாகவும் சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
0 comments:
Post a Comment