Wednesday, February 1, 2017

பனியில் மலர்ந்த கவிதை!


பனியில் மலர்ந்த கவிதை!



02 பிப்,2017 - 04:17 IST






எழுத்தின் அளவு:








பனி படர்ந்த சாலை, அதில் செல்லும் பேருந்து, துாறல் போல் விழும் பனிக்கட்டி, பஸ்சிலிருந்து, காற்றில் அலைபாயும் கூந்தலுடன், கவிதையாய் திரும்பி பார்க்கும் அதிதிராவ் என, ரசிகர்களின் மனதுகளில், சிலிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது, மணிரத்னத்தின் காற்று வெளியிடை, கிளிப்ஸ். இதில் ஹீரோயினாக நடிக்கும் அதிதி, தமிழ் ரசிர்களுக்கு புதியவர் அல்ல; 10 ஆண்டுகளுக்கு முன், மம்மூட்டி நடித்த, சிருங்காரம் என்ற படத்தில், தேவதாசியாக நடித்த பெண் தான் இவர். தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால், பாலிவுட்டுக்கு சென்று, சில படங்களில் கவர்ச்சியாக நடித்தார். அவரைத் தான், இப்போது, தன் படத்துக்காக அழைத்து வந்துள்ளார் மணிரத்னம். 'இந்த முறை, கோலிவுட்டை ஒரு கை பார்க்காமல் போக மாட்டேன்' என, சவால் விடுத்துள்ளாராம் அதிதி.


0 comments:

Post a Comment