Wednesday, February 1, 2017

மீண்டும் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்-விமல்

sivakarthikeyan and vimalகேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் விமல் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்தனர்.


அதன்பின்னர் விமல் நடித்த மாப்ள சிங்கம் படத்தில் எதுக்கு மச்சான் காதலு என்ற பாடலை சிவகார்த்திகேயன் பாடியிருந்தார்.


இந்நிலையில் மீண்டும் விமலுக்காக ஒரு பாடலை சிவகார்த்திகேயன் பாடவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.


தற்போது பூபதி பாண்டியன் இயக்கும் `மன்னர் வகையறா’ படத்தில் நடித்து வருகிறார் விமல்.


இதில் கயல் ஆனந்தி, சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.


`துருவங்கள் 16′ படத்திற்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜோய் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.


இப்படத்தில்தான் அந்த பாடல் இடம் பெற உள்ளதாம்.

0 comments:

Post a Comment