‛நந்தினி' சீரியலுக்கு பல டீம்கள் இரவு பகலாக பணியாற்றுகின்றனர்
20 பிப்,2017 - 12:09 IST
தமிழ் சீரியல் வரலாற்றில் நான்கு மொழிகளில் நந்தினி என்ற பிரமாண்ட சீரியலை தயாரித்து வருகிறார் நடிகை குஷ்பு. தமிழ், கன்னடத்தில் நேரடியாக தயாரிக்கப்படும் இந்த சீரியல், மலையாளம், தெலுங்கு மொழிகளில் டப் செய்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை குஷ்புவின் கணவரான சுந்தர்.சி இயக்குகிறார்.
மேலும், மலையாளத்தில் பல சீரியல் மற்றும் படங்களில் நடித்துள்ள மாளவிகா நடித்து வரும் இந்த சீரியல் வாரத்தில் 6 நாட்கள் ஒளிபரப்பாகி வருவதால், ஒருநாள்கூட இடைவெளி கொடுக்காமல் சென்னை சாலிகிராமத்தில் போடப்பட்டுள்ள அரண்மனை செட்டில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதோடு, டப்பிங், பின்னணி இசை உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளுக்கு பல டீம்கள் உருவாக்கப்பட்டு இரவு பகலாக வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.
0 comments:
Post a Comment