Monday, February 20, 2017

கண்டனம் போதாது. கடும் தண்டனை வேண்டும்; பாவனாவுக்காக நீதி கேட்கும் மலையாள திரையுலகம்..!


கண்டனம் போதாது. கடும் தண்டனை வேண்டும்; பாவனாவுக்காக நீதி கேட்கும் மலையாள திரையுலகம்..!



21 பிப்,2017 - 09:03 IST






எழுத்தின் அளவு:








மலையாள நடிகை பாவனா சில விஷமிகளால் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் மலையாள திரையுலகினரை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து மலையாள திரையுலக பிரபலங்கள் தங்களது கண்டனங்களை ஆவேசத்துடன் தெரிவித்து வருவதோடு இதற்கு அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்கிற ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பிரபலங்கள் தெரிவித்துள்ள கண்டனங்களை பார்ப்போம்.

மோகன்லால்


வெறும் கண்டனத்தோடு மட்டும் நாம் நின்று விடக்கூடாது.. இதற்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வரை நாம் குரல் கொடுக்கவேண்டும்.. இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மனதில் இந்த தண்டனை பயத்தை ஏற்படுத்த வேண்டும் என மோகன்லால் கூறியுள்ளார்.

இயக்குனர் மேஜர் ரவி


இதை கேள்விப்பட்டதும் மிகவும் அதிர்ச்சியாகி விட்டது.. ஒரு பிரபலத்துக்கே இந்த கதி நேர்ந்தது என்றால் சாதாரணமாக நம் வீட்டில் இருக்கும் சகோதரிகளின் நிலையை நினைப்பதற்கே பயமாக இருக்கிறது. நம் சட்டங்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. திரையுலகத்தினர் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் நீதி கிடைக்கும் தெருவில் இறங்கி போராட வேண்டிய தருணம் இது” என கூறியுள்ளார் இயக்குனர் மேஜர் ரவி.

பிருத்விராஜ்


இன்றைய (நேற்று) காலைப்பொழுது இந்த அதிர்ச்சிகாரமான செய்தியுடன் தான் என்னை எழுப்பியது.. சமுதாயத்தில் நானும் ஒரு சக மனிதன் என்று நினைக்கிறபோது என் தலை தானாக கீழே தொங்கிவிட்டது. எப்படிப்பட்ட பெண் அவர்..? இன்னும் சில தினங்களில் என்னுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இப்போது என்னிடம் இனி என்னால் கேமரா முன்னாடி நிற்கவே முடியாது என்கிறார்.. எனக்கு தெரியும் அவர் சினிமாவை எவ்வளவு நேசித்தார் என்று.. ஆனால் இன்று அவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த விலைமகன்களை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்தவேண்டும்.. 'பாவனா.. இந்த ஒருநாள் கொடூர நிகழ்வையே உன் வாழ்நாள் முழுவதையும் அதிகாரம் செய்ய விட்டுவிடாதே.. நாங்கள் உன்னோடு இருக்கிறோம்” என கூறியள்ளார் பிருத்விராஜ்.

துல்கர் சல்மான்

நம் நாட்டை குறிப்பாக கடவுளின் சொந்த நகரமான கேரளாவை நான் பண்பாட்டு உருவமாக, பெண்களை எப்படி போற்றுகிறோம் என்கிற கர்வத்தின் அடையாளமாக எடுத்துசென்று கொண்டிருக்கிறேன்.. ஆனால் இன்று நடந்திருப்பது என்ன..? வெட்கப்படுகிறேன் இந்த நிகழ்வு கண்டு.. போலீஸார் கயவர்களுக்கு தண்டனை வாங்கி தருவதில் உருதிகாட்ட வேண்டும் என கூறியுள்ளார் துல்கர் சல்மான்.

இவர்கள் தவிர ஜெயராம் காளிதாஸ், முகேஷ், அஞ்சலி மேனன் உள்ளிட்ட பலரும் பாவனாவுக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து முகநூலில் தங்களது கண்டனங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்கள்..


0 comments:

Post a Comment