Saturday, February 18, 2017

திடீர் பெற்றோர் கூறிய அடையாளங்கள் தனுஷ் உடலில் உள்ளதா?

Dhanush sudden parentsநடிகர் தனுஷ், தங்களின் சொந்த மகன் என மேலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பஸ் கண்டக்டர் கதிரேசன் மற்றும் இவரது மனைவி மீனாட்சி ஆகியோர் கூறி வருகின்றனர்.


இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.


அதற்கான ஆதாரங்களை அவர்கள் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர்.


இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, தனுஷை மகன் என கொண்டாடும் பெற்றோர் கூறியபடி அடையாளங்கள் தனுஷ் உடலில் உள்ளதா? என்பதை தனுஷ் தரப்பு தெரிவிக்க வேண்டும் என்றார்.


இதனையடுத்து, இந்த விசாரணையை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


மேலும் இதில் எவரேனும் தவறான தகவல்களை கொடுத்திருந்தால் விளைவுகளை சந்திக்க நேரும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.


Actor Dhanush sudden parents case updates


dhanush childhood

0 comments:

Post a Comment