Saturday, February 11, 2017

அட்டு படத்தினால் பின்வாங்கும் அட்டி!









அட்டு படத்தினால் பின்வாங்கும் அட்டி!



12 பிப்,2017 - 09:33 IST






எழுத்தின் அளவு:








வானவராயன் வல்லவராயன், நவரச திலகம், கடலை படங்களுக்குப்பிறகு மா.கா.பா.ஆனந்த் நாயகனாக நடித்த படம் அட்டி. இந்த படம் வடசென்னை கதையில் உருவாகியுள்ளது. விஜயபாஸ்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு சுந்தர்.சி.பாபு இசையமைத்துள்ளார். அதோடு இந்த படத்தை தானே வாங்கி வெளியிடப் போவதாகவும் அப்படத்தின் ஆடியோ விழாவில் கூறினார் சுந்தர்.சி.பாபு. ஆனால் பின்னர் அவர் அதிலிருந்து விலகிக்கொண்டதால் வேறு நிறுவனத்திடம் படத்தை வெளியிட பேசி வந்தனர். இதனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

ஆனால், தற்போது அவர்கள் அட்டி படத்தை வெளியிடலாம் என்று தயாரானபோது, அட்டு என்றொரு படத்தை வெளியிட விளம்பரம் செய்து வருகின்ற னர். அதோடு, அட்டு படமும் அட்டி படத்தைப்போலவே வடசென்னை கதையில்தான் தயாராகியுள்ளது. அதுமட்டுமின்றி, அட்டி, அட்டு என்று படங்களின் டைட்டீலும் ஒரேமாதிரியாக இருப்பதால், ஒரே நேரத்தில் இந்த படங்கள் வெளிவந்தால் இரண்டு பேருக்குமே பாதிப்பு என்பதால், அட்டுவுக்கு விட்டுக்கொடுத்து அட்டி படம் பின்வாங்கியுள்ளது.




Advertisement








டைரக்சன் கோர்ட்ஸ் படித்த லுத்புதீன் பாஷா!டைரக்சன் கோர்ட்ஸ் படித்த லுத்புதீன் ...










0 comments:

Post a Comment