Saturday, February 11, 2017

புதுமுக ஹீரோ படங்களை தவிர்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!


புதுமுக ஹீரோ படங்களை தவிர்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!



12 பிப்,2017 - 09:52 IST






எழுத்தின் அளவு:








அவர்களும் இவர்களும், அட்டகத்தி, உயர்திரு 420, சட்டப்படி குற்றம், விளை யாடவா என பல புதுமுக ஹீரோக்கள் நடித்த படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். பின்னர் ரம்மி படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர், காக்கா முட்டை படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகையாகி விட்டார். ஆனபோதும், இன்னும் முன்னணி நடிகை என்கிற இடத்தை அவர் பிடிக்கவில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது சிபிராஜூடன் கட்டப்பாவை காணோம், அதர்வாவுடன் முப்பரிமாணம், அதர்வாவுடன் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், அஸ்வினுடன் இது வேதாளம் சொல்லும் கதை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் தன்னைத்தேடி வந்த புதுமுக ஹீரோக்களின் படங்களை தவிர்த்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்தபடியாக மேல்தட்டு ஹீரோக்க ளுடன் நடிப்பதற்கும் ஆர்வமாக இருக்கிறாராம். அதனால் தற்போது தன்னைத்தேடி சில புதுமுக ஹீரோக்களின் படங்களில் நடிக்க அழைப்பு வந்தபோது, தமிழ், மலையாளத்தில் பிசியாக இருக்கிறேன். அதனால் தற்போதைக்கு கால்சீட் இல்லை என்று சொல்லி நாசுக்காக அந்த படங்களை திருப்பி அனுப்பியுள்ளார்.



0 comments:

Post a Comment