மகேஷ் பாபு கைவிட்ட படத்தில் வெங்கடேஷ்
12 பிப்,2017 - 10:49 IST
தெலுங்கு திரை உலகில் ஆக்ஷன் படங்களுக்கு பெயர்போன இயக்குனர் பூரி ஜெகன் நாத் மகேஷ் பாபுவிடம் ஜன கண மன எனும் ஆக்ஷன் படத்தின் கதையைக் கூறியிருந்தார். மகேஷ் பாபும் இப்படத்தில் நடிப்பதை டுவிட்டரில் உறுதி செய்தார். ஆனால் பூரி ஜெகன் நாத் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்காத மகேஷ் பாபு அடுத்ததடுத்த படங்களில் நடிக்க துவங்கினார். இருப்பினும் மகேஷ் பாபுவை சந்தித்து பேசிய பூரி ஜெகன் நாத்திடம் ஜன கண மன படத்தில் நடிக்க விரும்பவில்லை என மகேஷ் பாபு வெளிப்படையாக கூறிவிட்டாராம். இதனால் வேறு ஹீரோவை தேடி வந்த இயக்குனர் பூரி ஜெகன் நாத் வெங்கடேஷிடம் அப்படத்தின் கதையை கூறி சம்மதம் வாங்கியுள்ளாராம். குரு படத்தில் நடித்து வரும் வெங்கடேஷ் அப்படத்தை முடித்த பின்னர் பூரி ஜெகன்நாத் இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று இயக்குனருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment