சம்பளத்தை ரூ 10 கோடியாக உயர்த்திய பாலகிருஷ்ணா
12 பிப்,2017 - 11:21 IST
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கௌதமிபுத்ர சடர்கனி எனும் சரித்திர படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது சம்பளத்தை ரூ 10 கோடியாக உயர்த்தி விட்டார். இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணாவின் 100வது படமாக வெளிவந்த கௌதமிபுத்ர சடர்கனி திரைப்படம் ரூ 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இப்படத்திற்கு ரூ 7 கோடி சம்பளம் வாங்கிய பாலகிருஷ்ணா, தனது சம்பளத்தை ரூ 10 கோடியாக உயர்த்தி விட்டாராம். பாலகிருஷ்ணா தனது தந்தையான பழம்பெரும் நடிகர் என்.டி.ராமா ராவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளதாக கூறினார். இது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. இயக்குனர்கள் பூரி ஜெகன்நாத், கிருஷ்ண வம்சி, கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.வி.கிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட இயக்குனர்கள் பாலகிருஷ்ணாவிடம் கதை கூறியுள்ளனர். இவர்களில் யாரை பாலகிருஷ்ணா தேர்வு செய்துள்ளார் என்பதை விரைவில் அவர் அறிவிப்பார்.
0 comments:
Post a Comment