வாகை சந்திரசேகர் மகள் திருமணம்: ரஜினி நேரில் வாழ்த்து
15 பிப்,2017 - 10:32 IST
நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் சிவநந்தினிக்கும் பழனியில் உள்ள பிரபல பிரசாத விற்பனை நிறுவனமான சித்தனாதன் அன்ட் கோ உரிமையாளர் ரவீந்திரன் மகன் தினேஷ்குமாருக்கும் கடந்த 2ந் தேதி பழனியில் உள்ள பரமேஸ்வரி திருமணம் மண்டபத்தில் விமரிசையாக திருமணம் நடந்தது. அதில் உறவினர்கள் நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார்.
இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் நேற்று நடந்தது. இதில் திரையுலக பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.
0 comments:
Post a Comment