Friday, February 17, 2017

ரஜினியின் புதிய படம் மே மாதம் தொடங்குகிறது!


ரஜினியின் புதிய படம் மே மாதம் தொடங்குகிறது!



18 பிப்,2017 - 10:19 IST






எழுத்தின் அளவு:








அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் கபாலி. இந்த படம் 200 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதோடு வசூல்ரீதியாகவும் பெரிய அளவில் சாதனை புரிந்தது. அதையடுத்து, பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் 2.ஓ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் நிறைவு பெறுகிறது. பின்னர் ஒரு மாத காலம் ஓய்வெடுக்கிறார் ரஜினி.

அதையடுத்து, மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் தொடங்குகிறது. தனது ஒரு படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிக்கும் கதைகள், நிறுவனம் குறித்து முடிவெடுப் பார் ரஜினி. ஆனால் இந்த படத்தை அவரது மருமகனான தனுஷ் தயாரிப்பதால் முன்கூட்டியே அவர் அறிவித்து விட்டார். அதையடுத்து, ஸ்கிரிப்ட் வேலை களை தொடங்கிய டைரக்டர் ரஞ்சித், லொகேசன் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் முடித்து விட்டவர் இப்போது ரஜினிக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.


0 comments:

Post a Comment