ஹிந்தி மீடியம் 2 உறுதி
19 ஜூன், 2017 - 12:52 IST
இர்பான் கான், சபா ஓமர் நடிப்பில், சாகேத் சவுத்ரி இயக்கத்தில் வெளியான படம் ஹிந்தி மீடியம். விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்ற இப்படத்திற்கு ஆரம்பத்தில் வசூல் பெரிதாக இல்லை. ஆனால் பின்னர் படத்தின் வசூல் சிறப்பாக இருந்தது. தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் பெரிய லாபத்தை தரவில்லை என்றாலும் ஓரளவுக்கு லாபகரமான படமாக அமைந்தது. இந்நிலையில் ஹிந்தி மீடியம் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முடிவில் இருக்கிறார் தயாரிப்பாளர் தினேஷ் விஜன்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது... "ஹிந்தி மீடியம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு அளப்பரியது. இர்பான்கான், சபா ஓமர் ஆகியோரின் கெமஸ்டிரி படத்தில் சிறப்பாக இருந்தது. நிச்சயம் இரண்டாம் பாகத்திற்கான சாத்தியம் இருக்கிறது". என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment