வருண்தேஜ் படத்தை தொடங்கி வைத்த பாகுபலி இசையமைப்பாளர் கீரவாணி!
19 ஜூன், 2017 - 14:16 IST
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் இசையமைத்தவர் எம்.எம்.கீரவாணி. இவர் இசையமைப்பாளராக அறிமுகமானது தமிழில் கே.பாலசந்தர் இயக்கிய அழகன் படத்தில் தான். அதன்பிறகு நீ பாதி நான் பாதி, பாட்டொன்று கேட்டேன், வானமே எல்லை, சேவகன், பிரதாப் உள்பட பல படங்களுக்கு மரகதமணி என்ற பெயரில் இசையமைத்தார். அதன்பிறகு தெலுங்கு சென்று எம்.எம்.கீரவாணி என்ற பெயரில் இசையமைத்து வருகிறார். இயக்குனர் ராஜமவுலியின் உறவுக்கார அண்ணான இவர், ராஜமவுலியின் மகதீரா, பாகுபலி படங்களுக்கும் இசையமைத்தார்.
தற்போது ராஜமவுலியின் படங்கள் மட்டுமின்றி மற்ற இயக்குனர்களின் படங்களுக்கும் பரவலாக இசையமைக்கத் தொடங்கியிருக்கும் கீரவாணி, ஐதராபாத்தில் வருண்தேஜ்-ராஷி கண்ணா நடிக்கும் புதிய படத்தின் முதல் காட்சியை கிளாப், அடித்து தொடங்கி வைத்திருக்கிறார். ரொமான்டிக் காதல் கதையில் வேங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார்.
0 comments:
Post a Comment