Wednesday, June 14, 2017

சல்மானின் அடுத்த படம் என்ன.?


சல்மானின் அடுத்த படம் என்ன.?



14 ஜூன், 2017 - 14:33 IST






எழுத்தின் அளவு:








சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள டியூப்லைட் படம் வருகிற ரம்ஜான் திருநாளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து சல்மான், டைகர் ஜிந்தா ஹே என்ற படத்தில் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து சல்மான் ரெமோ டிசோசா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிப்பதாக செய்தி வெளியான நிலையில் சமீபத்தில் சல்மான் அளித்த பேட்டி ஒன்றில் தனது அடுத்தப்படம் பற்றி பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது..."என்னுடைய அடுத்தப்படத்தில் நான் மனைவியை இழந்த கணவனாக, 9 வயது பெண் குழந்தைக்கு அப்பாவாக நடிக்கிறேன். என் மகள் நடனத்தில் வல்லவர், போட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் சமயத்தில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு நடனமாட முடியாத நிலை ஏற்படுகிறது. ஆனால் அவர், அவருக்கு பதிலாக என் பெயரை போட்டியில் கொடுத்து விடுகிறார். இதன்பிறகு நான் எப்படி நடனம் கற்று போட்டியில் கலந்து கொண்டு என் பெண்ணின் கனவை நிறைவேற்றுகிறேன் என்பது மாதிரியான படம்" என்று கூறியுள்ளார். சல்மானின் இந்த பேட்டி மூலம் அவர் ரொமோவின் இயக்கத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.


0 comments:

Post a Comment