Wednesday, June 14, 2017

ஆர்.கே.சுரேஷின் அடுத்த அதிரடி ‘தென்னாட்டான்’


rk sureshவிநியோகஸ்தர், தயாரிப்பாளர், வில்லன் என பன்முகம் கொண்ட ஆர்.கே. சுரேஷ், அண்மைகாலமாக பல படங்களில் ஹீரோவாக கமிட் ஆகி வருகிறார்.


இவரின் அடுத்த படத்திற்கு ‘தென்னாட்டான்’ என்று பெயரிடப்பட்டு அதன் பூஜை போடப்பட்டது.

இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கிறார். படத்தைப் புதுமுக இயக்குநர் எம்.விஜய் பாண்டி இயக்குகிறார்.

திவிஷா ரேஷ்மா கிரியேஷன் சார்பில் சரவணன் தயாரிக்கிறார்.

படக்குழுவினர் கலந்து கொள்ள தயாரிப்பு அலுவலகத்தில் பூஜை எளிமையாக போடப்பட்டது.

ஆகஸ்ட் இறுதியில் இதன் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள்.

RK Suresh Next Action Avatar Thennattan movie Pooja Starts today



0 comments:

Post a Comment