ஹன்சிகாவை சங்கமித்ராவாக்க முயற்சி
01 ஜூலை, 2017 - 10:41 IST
தேனாண்டாள் ஸ்டூடியோ லமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் என்.ராமசாமி, ரூ.300 கோடி ரூபாய் செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ள படம் சங்கமித்ரா. சுந்தர்.சி இயக்குகிறார். இது பாகுபலி போன்று பிரமாண்ட வரலாற்று படம். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாரிக்க உள்ளனர். ஒவ்வொரு மொழிக்கும் அந்தந்த மொழி முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க எண்ணியுள்ளனர். ஆனால் எல்லா மொழிக்கும் ஹீரோயின் சங்கமித்ரா ஒருவர் தான் என்கிறார்கள். தமிழுக்கு ஆர்யாவும், ஜெயம்ரவியும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டார்கள்.
சங்கமித்ராவாக நடிக்க ஆரம்பத்தில் அனுஷ்கா, நயன்தாராவிடம் பேசப்பட்டது. அனுஷ்கா பாகுபலிக்கு பிறகு திருமணம் செய்ய இருப்பதாக கூறி மறுத்து விட்டதாகவும், நயன்தாரா தன்னால் வருடக் கணக்கில் கால்ஷீட் தரமுடியாது என்று கூறிவிட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் இறுதியில் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்தில் வாள் சண்டை, கத்தி சண்டை, குதிரையேற்றம் போன்றவை இருப்பதால் இதனை ஹாலிவுட் சண்டை இயக்குனரிடம் கற்றுக் கொள்ள அமெரிக்கா சென்றார். கேன்ஸ் பட விழாவில் நடந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
அதன் பிறகு திடீரென படத்தின் கதையை எனக்கு கூறவில்லை. சரியான திட்டமிடல் இல்லை என்று கூறி படத்தை விட்டு விலகினார். தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்ருதி நடிக்கவில்லை என்று தயாரிப்பு தரப்பு கூறியது.
இந்த நிலையில் சங்கமித்ராவாக ஹன்சிகாவை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சுந்தர்.சி இயக்கிய அரண்மனை, அரண்மனை 2 படங்களில் நடித்ததின் மூலம் சுந்தர்.சி குடும்பத்துக்கு ஹன்சிகா நெருக்கமாகிவிட்டார். அதன் அடிப்படையில் சுந்தர்.சி ஹன்சிகாவை சங்கமித்ராவாக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. முறையான சண்டைபயிற்சி அளித்து அவரை சங்கமித்ராவாவ மாற்றி விடலாம் என்று கருதுகிறார்.
ஆனால் ஹன்சிகா ஒரு மாகராணிக்குரிய அழகு உடையவர்தான் ஆனால் அவரது குழந்தைத்தனமாக முகம் மகாராணிக்குரிய கம்பீரத்தை தராது என்று தயாரிப்பு தரப்பு கருதுகிறதாம். ஹன்சிகா சங்கமித்ராவாக நடிப்பது பற்றிய முறையான அறிப்பு எதுவும் வெளிவரவில்லை.
0 comments:
Post a Comment