Saturday, July 1, 2017

வில்லனுக்காக கொடி வீரன் யூனிட் வெயிட்டிங்


வில்லனுக்காக கொடி வீரன் யூனிட் வெயிட்டிங்



01 ஜூலை, 2017 - 12:39 IST






எழுத்தின் அளவு:






Kodi-Veeran-waiting-for-Villain


குட்டிப்புலி, கொம்பன், மருது படங்களைத் தொடர்ந்து முத்தையா இயக்கி வரும் படம் கொடிவீரன். இந்த படத்தில் அவரது முதல்பட நாயகனான சசிகுமார் நடிக்கிறார். வழக்கம்போல் இந்த படத்தையும் கிராமத்து கதையில் இயக்குகிறார் முத்தையா. இந்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க, குற்றம் கடிதல் பட நாயகி மகிமா நம்பியார் நாயகியாக நடிக்கிறார். தங்கை வேடத்தில் ரேணிகுண்டா சனுஜா நடிக்கிறார். பூர்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேலும், இந்த படத்தில் வில்லனாக யாரை நடிக்க வைப்பது என்பது ஆரம்பத்தில் இருந்தே குழப்பம் நீடித்து வருகிறது. முதலில் பலரது பெயரை பரிசீலணை செய்தவர்கள், பின்னர் அர்ஜூன் நடிப்பதாக சொன்னார்கள். பின்னர் அவர் நடிக்கவில்லை என்றார்கள்.

அதையடுத்து, இப்போது சரத்குமார், பசுபதி இருவரிடமும் பேசி வருகிறார்கள், சரத்குமாரிடம் பதில் இல்லை. அதனால் பசுபதி நடிக்கவே அதிகம் வாய்ப்பிருக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் கொடிவீரன் படத்தின் வில்லன் யார் என்பது உறுதியாகி விடும். அதன்பிறகு மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.


0 comments:

Post a Comment