சக நடிகைகளிடம் வாழ்த்து பெற்ற த்ரிஷா!
17 டிச,2016 - 12:08 IST
பிரஷாந்த்-சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் தோழியாக நடித்தவர் த்ரிஷா. அதையடுத்து மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகி விட்டார். அப்படி தனது சினிமா கேரியரை தொடங்கிய த்ரிஷா, இப்போது 2016 வரை அந்த இடத்தை தக்க வைத்துக்கொண்டு வருகிறார். அதோடு தனது பயணத்தை இன்னும் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்த அவர், அடுத்தபடியாக மலையாளத்திலும் கால்பதித்திருக்கிறார்.
அந்த வகையில், த்ரிஷா நாயகியாக நடித்த முதல் படமான மெளனம் பேசியதே 2002-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந்தேதி திரைக்கு வந்தது. அந்த கணக்கில் பார்க்கும்போது 2016 டிசம்பர் 13-ந் தேதியோடு த்ரிஷா நடிக்க வந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து த்ரிஷாவின் நட்பு வட்டாரத்தினர் அவருக்கு வாழ்த்து சொல்லி வரும் நிலையில், சமந்தா, அனுபமா உள்ளிட்ட சில சக நடிகைகளும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment