Saturday, December 10, 2016

சிம்பு பாடிய ‘பீப் சாங்…’ முதல் வருட கொண்டாட்டம்


simbu songகடந்த வருடம் சென்னை உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் பேய் மழையால் வெள்ளக் காடாக காட்சியளித்தது.


தண்ணீரில் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும்போதே அதை விட பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் பீப் சாங்.

சிம்பு எழுதி பாடியதாக கூறப்பட்ட இப்பாடல் பெரும் சர்ச்சைகளை உண்டாக்கியது.

பல மாதர் சங்கங்கள் சிம்பு வீட்டின் முன்பும் போராட்டம் நடத்தினார்கள்.

நீதிமன்றத்திலும் சிம்புவுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன.

இந்நிலையில் ஒரு படத்தின் முதல் ஆண்டு விழா கொண்டாடுவதைப் போல ‘பீப் சாங்’ கின் ஒரு வருடத்தை இணையங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இதை யார் செய்து வருகிறார்களோ? ஆனால் சிம்பு இதை கண்டித்தால் நல்லது. இல்லேன்னா….

ஐய்யோ… அப்போ இதை வருஷ வருஷம் கொண்டாடுவாங்களே…

One year celebration of simbus #BeepSong

0 comments:

Post a Comment