Thursday, December 22, 2016

நாக சைதன்யாவை கண்ணீர் சிந்த வைத்த சமந்தா


நாக சைதன்யாவை கண்ணீர் சிந்த வைத்த சமந்தா



23 டிச,2016 - 10:38 IST






எழுத்தின் அளவு:








தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை தீவிரமாக காதலித்து வரும் சமந்தா நாகசைதன்யாவை அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இதனால் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டுள்ள சமந்தா, தனது காதலின் சுவாரஸ்யமான நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள துவங்கியுள்ளார். பேஸ்புக்கில் ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா, நாகசைதன்யா தன்னை எவ்வளவு காதலிக்கின்றார் என்பதை தான் உணர்ந்த தருணத்தை விளக்கியுள்ளார். சமந்தா நாகசைதன்யாவுடன் தனது, 'தெயர்' படத்தைப் பார்க்க சென்றுள்ளார். அப்படத்தில் விபத்தில் மரணமடையும் சமந்தாவைப் பார்த்து, நாக சைதன்யா அழுததாகவும் நாக சைதன்யாவின் அருகில் அமர்ந்து படம் பார்த்த தனக்கு அந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் சமந்தா கூறியுள்ளார். நாகசைதன்யாவின் இளைய சகோதரர் அகிலின் திருமணம் 2017 கோடை விடுமுறையில் கோலாகலமாக இத்தாலியில் நடைபெறவுள்ளது. இவர்களது திருமணத்திற்கு பின்னர் நாகசைதன்யா-சமந்தாவின் திருமணம் நடைபெறும் என கூறப்படுகின்றது.


0 comments:

Post a Comment