என் மகள் நடிகையாக வேண்டாம்:ஸ்வேதா பச்சன் கருத்து
18 டிச,2016 - 13:49 IST
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதாவின் மகள் நவ்யா நவேலி நந்தா ஏற்கனவே பிரபலம். லண்டனில் படிக்கும் நவ்யா விதவிதமாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அதனால் நவ்யாவிற்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்து குவிகிறது. ஆனால் ஸ்வேதாவிற்கு தனது மகள் நடிப்பதில் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார் இந்நிலையில் மும்பையில் நடந்த ஐஸ்வர்யா தனுஷின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஸ்வேதா பேசினார்.
இதைப்பற்றி ஸ்வேதா கூறியதாவது..."என் மகள் நடிகையாக வேண்டும். அவள் நடிக்க வந்தால் நான் கவலைப்படுவேன். ஏனென்றால் நடிகையாக இருப்பது அவ்வளவு எளிது இல்லை. கடினமாக உழைக்க வேண்டும். அதிலும் பெண்ணாக இருந்தால் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். திரையுலகில் நிறைய தோல்விகள் உள்ளது. இவ்வாறு படத்திற்காக நடிப்பதை மக்கள் பொது இடத்தில் விமர்சிப்பார்கள். என் அம்மா நடிப்பு பள்ளியில் சேர்ந்து நடிப்பில் கற்றுத் தேர்ந்தார். இது தான் நடிகையாக முறையாக செய்ய வேண்டியது. நடிக்க வந்தவுடனே புகழும், பணமும் வந்துவிடாது" என்றார்.
0 comments:
Post a Comment