Tuesday, February 28, 2017
வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா. அந்தப் படத்திற்கு பிறகு வெயில் பிரியங்கா என்றே அழைக்கப்ட்டார். மலையாளத்தில் பிரியங்கா நாயர் என்ற பெயரில் நடித்தார். வெயில் படத்திற்கு பிறகு தமிழில் தொல்லைபேசி, திருத்தம் படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வானம் பார்த்த சீமையிலே என்ற படத்தில் நடித்தார். ...
பிரியங்காவுடன் மோதலா...? - தீபிகா பதில்
28 பிப்,2017 - 16:43 IST
எழுத்தின் அளவு:
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகாவும், பிரியங்காவும் இப்போது ஹாலிவுட் நடிகைகளாக மாறிவிட்டனர். இருவரும் அவரவர் படங்களில் பிஸியாகத்தான் உள்ளனர். ஆனாபோதும், தீபிகா, பிரியங்கா இடையே ஒருவித பனிப்போர் நீண்டநாட்களாகவே நீடித்து வருவதாக பாலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. இதுப்பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தீபிகாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது...
ஒவ்வொரு முறையும் நான் ஏதாவது படிக்கும் போது நாங்கள் இருவரும் நண்பர்களாக இருக்கிறோம் என்று ஒருமுறை கூட படித்தது கிடையாது. பிரியங்கா என்பவர் ஒரு நடிகை, அவரை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். இருவரையும் ஒப்பிடும் போது வித்தியாசமாக உணர்வேன், ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன், நாங்கள் இருவரும் நடிகைகள், தொழில் ரீதியாக இருவருக்கும் போட்டிகள் இருக்கும், மற்றபடி வேறு எதுவும் கிடையாது. அவர், அவருக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகிறார். அதேப்போல் நான் எனக்கான நேரம், வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகிறேன்'' என்று கூறியுள்ளார்.
தீபிகா படுகோனே, தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ‛பத்மாவதி' என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்தாண்டு நவ., 17-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
‘சார்லி சாப்ளின்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராமனின் மகள். பின்னர் நடன இயக்குனர் ஆனார். இப்போது திரைப்பட இயக்குனராக மாறி இருக்கிறார்.
படம் பற்றி கூறிய காயத்ரி ரகுராம்…
“கவர்ச்சிகரமான சினிமா உலகில் யாருக்கும் தெரியாமல் மறைந்திருக்கும், உலகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய கதை. நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படத்தை இயக்குகிறேன்.
அவர்களுடைய கனவுகளையும், ஆசைகளையும் முதன் முதலில் தமிழ் சினிமாவில் சொல்லும் படம். குடும்ப சூழ்நிலை காரணமாக நடனமாடும் பெண்ணாக தள்ளப்பட்ட பள்ளி செல்லும் சிறுமி, சாதாரண கனவுகளோடும், ஆசைகளோடும் வாழ்க்கையை பயணிக்கிறாள்.
ஆனால், முற்றிலும் மாறாக உண்மையில் ஒருவரால் நினைத்து பார்க்க முடியாத கொடுமைகளும், அவலங்களும் அனுபவிக்கும் அவளது வாழ்க்கையே ‘யாதுமாகி நின்றாய்’ படத்தின் கதை” என்றார்.
நிகழ்ச்சியில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரஜினியின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், கோச்சடையான் படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை சவுந்தர்யா ஓட்டி வந்த கார், ஆழ்வார்பேட்டை அருகே நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதியது. கார் மோதியதில் ஆட்டோவுக்குள் தூங்கிக்கொண்டிருந்த மணி என்பவர் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆட்டோவும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
ஆட்டோ மீது கார் மோதிய சம்பவம் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் உடனே அந்த இடத்தில் கூட ஆரம்பித்தனர். காரை ஓட்டி வந்தது ரஜினியின் மகள் சவுந்தர்யா என்றதும், மேலும் பரபரப்பு கூடியது. உடனே, சம்பவ இடத்திற்கு நடிகர் தனுஷ் விரைந்து, சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டியதாக கூறப்படுகிறது.
தனுஷ் தரப்பிலிருந்து ஆட்டோ சேதத்திற்குண்டான பொருட்செலவையும், டிரைவரின் சிகிச்சைக்குண்டான பணத்தையும் கொடுக்கும்படி உத்தரவாதம் அளிக்கப்பட்ட பிறகே, சவுந்தர்யா மீது எந்த வழக்கும் இல்லாமல் சமரச பேச்சுவார்த்தையிலேயே இந்த பிரச்சினை முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
'வேதாளம்' - ஹிந்தி டப்பிங்கிலும் புதிய சாதனை
28 பிப்,2017 - 14:46 IST
எழுத்தின் அளவு:
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது படங்களின் வசூல் விவரம் ஒரு மிகப் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுவதைப் போல, யு டியூபிலும் எவ்வளவு பார்வைகளைப் பெறுகிறது என்பதும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
யு டியூப் சாதனையில் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரது படங்கள்தான் அடுத்தடுத்து சாதனைகளைப் படைத்து வருகிறது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் யு டியூபில் வெளியான படங்களின் டீசர், டிரைலரை யாரும் கண்டு கொண்டதேயில்லை. ஆனால், இப்போதோ ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வை என பெருமை பேசிக் கொள்கிறார்கள்.
உதாரணத்திற்கு அஜித் நடித்து 2011ல் யு டியூபில் வெளியான 'மங்காத்தா' டீசருக்கு 5 லட்சம் பார்வைகளும், 2012ல் யு டியுபில் வெளியான 'பில்லா 2' டீசரை வெறும் 21 ஆயிரம் பார்வைகளும் மட்டுமே கிடைத்துள்ளன. 2013ல் வெளிவந்த 'ஆரம்பம்' டீசர்தான் 26 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஆனால், 2014ல் வெளிவந்த 'வீரம்' டிரைலருக்கு 5 லட்சம் பார்வைகள் மட்டுமே கிடைத்துள்ளது. அடுத்து 'என்னை அறிந்தால்' டீசர் 55 லட்சம் பார்வைகளைப் பெற்றது. 'வேதாளம்' டீசர் கூட 67 லட்சம் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. இருந்தாலும் முதல் முறையாக 1 லட்சம் லைக்குகளைக் கடந்த டீசராக அது அமைந்தது.
'வேதாளம்' டீசர், பாடல்களிலிருந்துதான் கடந்த இரண்டு வருடங்களாக யு டியூபில் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் மோதல் எழுந்து வருகிறது. 'வேதாளம்' படத்தின் 'ஆலுமா... டோலுமா...' பாடலின் லிரிக் வீடியோ 1 கோடியே 51 லட்சம் பார்வைகளையும், பாடல் வீடியோ 1 கோடியே 68 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது.
இப்போது 'வேதாளம்' படத்தின் ஹிந்தி டப்பிங்கின் முழு படம் யு டியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. ஒரு தமிழ்ப் படத்தின் ஹிந்தி டப்பிங் வீடியோவை இவ்வளவு பேர் பார்ப்பது இதுவே முதல் முறை.
அஜித் ரசிகர்கள் அடுத்து 'விவேகம்' பட டீசருக்கு வெயிட்டிங்....!
துயரங்களிலிருந்து மீண்டு வருவேன் - பாவனா
28 பிப்,2017 - 17:58 IST
எழுத்தின் அளவு:
கேரளாவைச் சேர்ந்த, பிரபல நடிகை, பாவனா, தென்னிந்திய மொழிகளில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொச்சியில் காரில் சென்றபோது, அவரை வழிமறித்து, அந்த காரில் ஏறிய சிலர், அவரை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினர். இதுதொடர்பாக அவரின் முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனில் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாவனாவுக்கு ஆதரவாக திரையுலகினர், அரசியல்வாதிகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக முதன்முறையாக இன்ஸ்ட்ராகிராமில் தன் கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛வாழ்க்கை என்னை பலமுறை கீழே தள்ளிவிட்டுள்ளது. நான் பார்க்க நினைக்காத விஷயங்களை காண்பித்துள்ளது. துயரங்களையும் தோல்விகளையும் அனுபவித்தவள். ஆனால் ஒன்று நான் எப்போதும் மீண்டு வருவேன். உங்களின் அன்பு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி'' என்று கூறியுள்ளார்.
சாந்தனு, ஸ்ருஷ்டி டாங்கே இணைந்து நடித்துள்ள படம் முப்பரிமாணம்.
அதிரூபன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
வருகிற மார்ச் 3ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு காட்சியை திரையிட்டுள்ளனர்.
அப்படத்தை பார்த்த இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளதாவது…
படத்தின் இடைவேளை வரை இதுவும் பொழுதுபோக்கு படம்தான் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் இடைவேளைக்கு பிறகு இப்படம் முற்றிலும் வேறு ஒரு கதைகளத்தில் இருந்தது.
சாந்தனு மற்றும் ஸ்ருஷ்டியின் நடிப்பு அருமை என கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
Suseenthiran letter about Shanthanus Mupparimanam movie
அந்த கடிதம்…
தயாரிப்பாளர்க்கு ஷாக் கொடுத்த கயல்ஆனந்தி!
28 பிப்,2017 - 13:56 IST
எழுத்தின் அளவு:
திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்திலேயே தனது மார்க்கெட் எகிறும் என்று எதிர்பார்த்தார் கயல் ஆனந்தி. ஆனால் அந்த படம் வெற்றி பெற்றபோதும் அவரைத்தேடி பெரிய அளவிலான படங்கள் வரவில்லை. அதன்பிறகும் ஜி.வி.பிரகாஷே தான் நடித்த எனக்கு இன்னொரு பேரு இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களில் ஆனந்திக்கு வாய்ப்புக்கொடுத்து அவரது மார்க்கெட்டை உயர்த்தி விட்டுள்ளார்.
விளைவு, தற்போது மன்னர் வகையறா, ரூபா, பண்டிகை என பல படங்களில் நடித்து வருகிறார் கயல் ஆனந்தி. இந்நிலையில், இதுவரை விமலுடன் நடித்த மன்னார் வகையறா படத்தில் கமிட்டாவது வரை பத்து முதல் பதினைந்து லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்த ஆனந்தி, தற்போது முன்னணி டைரக்டர், நடி கர்களின் படம் என்றால் 25 லட்சம், பிரபலமில்லாத டைரக்டர், நடிகர்களின் படம் என்றால் 30 லட்சம் சம்பளம் தரவேண்டும் என்று கூறி வருகிறார். இதுவரை ஆனந்தியின் சம்பளத்தை தாங்களாகவே தீர்மானித்து வந்த தயாரிப்பாளர்கள், இப்போது அவரே தனது சம்பளத்தை தீர்மானித்திருப்பதால் அதிர்ச்சியடைந் துள்ளனர்.
ஜெய்பிரகாஷாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்!
28 பிப்,2017 - 14:13 IST
எழுத்தின் அளவு:
தாரைத்தப்பட்டைக்குப் பிறகு குற்றப்பரம்பரை காலகட்டத்தில் நடந்த ஒரு கதையை படமாக்க தயாரானார் பாலா. அந்த கதையில் நடிக்க அரவிந்த்சாமி, விஷால், ஆர்யா, ராணா என பல முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க முடி வெடுத்திருந்தார். அப்போது தனது குற்றப்பரம்பரை கதையைத்தான் பாலா படமாக்குகிறார் என்று பாரதிராஜாதரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. அதையடுத்து அந்த காலகட்டத்தில் நடந்த வேறொரு கதையைத்தான் நான் படமாக்குகிறேன் என்று குரல் கொடுத்தார் பாலா.
பின்னர், அந்த கதை இல்லாமல் வேறொரு காதல் கதையை படமாக்கப்போவதாக சாட்டை யுவன், சூப்பர் சிங்கர் பாடகி பிரகதி ஆகியோரை அழைத்து பேசியிருந்தார். அந்த கதைகூட தேவர் பையனுக்கும், பிராமண பெண்ணுக்குமிடையே உருவாகும் காதலை மையப்படுத்தியது என்றும் கூறப்பட்டது. தற்போது ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரும் பாலாவின் புதிய படத்தில் நடிப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், இந்த படத்தில் ஜோதிகாவும், ஜி.வி.பிரகாசும் அக்காள் தம்பியாக நடிப்பதாக கூறப்படும் நிலையில், 30 வருடங்களுக்கு முன்பு சென்னை விருகம் பாக்கத்தில் நடந்த ஒரு கொலை சம்பவத்தை தழுவி இந்த படம் உருவாகயிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், ஒரே நேரத்தில் ஒன்பது பேரை கொலை செய்த ஜெய்பிரகாஷ் என்பவரின் கேரக்டரில்தான் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறாராம். ஆக, இதுவும் கொலைக்குற்றம் செய்த குற்றப்பரம்பரை கதைதான்.
பாலா இயக்கத்தில் முதன்முறையாக ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்தை EON Studios நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது.
இளையராஜா இசையமைக்க, ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை படத்தலைப்புடன் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்திற்கு நாச்சியார் என பெயரிட்டுள்ளனர்.
இந்த பர்ஸ்ட் லுக் நிச்சயம் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பை பெறும் என அதன் வடிவமைப்பிலேயே தெரிகிறது.
GV Prakash and Jyothika starring Naachiyaar movie first look