பிப்ரவரி 17ல் 7 படங்கள் ரிலீஸ்
16 பிப்,2017 - 10:29 IST
2017ம் ஆண்டு பிறந்ததிலிருந்தே வாரா வாரம் திரைப்படங்கள் வெளியாவதில் ஒரு வித சிக்கல் நீடித்து வருகிறது. அரசியல் சூழ்நிலைகள்தான் அதற்குக் காரணம்க இருந்து வருகிறது. ஜனவரி மாதத்தில் கூட வெறும் 8 படங்கள்தான் வெளியானது. வருடத்தின் முதல் மாதத்திலேயே இவ்வளவு குறைவான படங்கள் வெளியாகும் என திரையுலகத்தைச் சேர்ந்தவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
பிப்ரவரி மாதத்திலாவது அதிக படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் இரண்டு வாரங்களில் 4 படங்கள் மட்டுமே வெளியானது. அந்தக் குறையை போக்கும் விதத்தில் 2017ம் வருடத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 7 படங்கள் நாளை பிப்ரவரி 17ம் தேதியன்று வெளியாக உள்ளது.
“அரசகுலம், என்னோடு விளையாடு, காதல் கண் கட்டுதே, கண்டேன் காதல் கொண்டேன், வாங்க வாங்க, பகடி ஆட்டம், ரம்” ஆகிய 7 படங்கள் நாளை வெளியாகின்றன. ஆறு படங்களும் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் இல்லை என்றாலும் கடந்த 45 நாட்களாக பட வெளியீடுகளில் இருந்த ஒரு தேக்கத்தை சரி செய்யும் படங்களாக வெளிவருகின்றன. இந்தப் படங்களைத் தவிர 'காஸி' டப்பிங் படமும் நாளை வெளியாகிறது.
நாளை வெளிவருவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் அடுத்த வாரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 24ம் தேதி இந்தப் படத்துடன் 'யமன், கனவு வாரியம், முத்துராமலிங்கம், கொளஞ்சி' ஆகிய படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதம் பள்ளித் தேர்வுகள் நடைபெறும் மாதம் என்பதால் குறைவான படங்களே வெளிவரும் நிலை உருவாகலாம்.
0 comments:
Post a Comment