மனைவிக்கு பயப்படும் நடிகர்
16 பிப்,2017 - 00:50 IST
நாகார்ஜுனாவின் இளைய மகன், அகிலுக்கு திருமணம் முடிந்துவிட்டது. மூத்த மகன் நாகசைதன்யாவுக்கு, நடிகை சமந்தாவுடன் விரைவில் திருமணம் நடக்கப் போகிறது. ஆனால், நாகார்ஜுனா, இன்னும் மைனராகத் தான் வலம் வருகிறார். அவர் சமீபத்தில் நடித்த தெலுங்குப் படம், சோக்காலி மைனர் என்ற பெயரில், தமிழில் டப்பிங் செய்யப்படுகிறது. இதில், லாவண்யா, ரம்யா கிருஷ்ணன் என, நாகார்ஜுனாவுக்கு இரண்டு ஜோடி. ரம்யா கிருஷ்ணன், மனைவியாக நடித்துள்ளார். மனைவிக்கு பயப்படும் கணவராக நாகார்ஜுனா நடித்துள்ளாராம். தெலுங்கைப் போலவே, தமிழிலும் இந்த படம், செமத்தியாக கல்லா கட்டும் என, நம்புகிறது படக்குழு.
Advertisement
0 comments:
Post a Comment