சின்னத்திரையிலேயே தங்கி விட்ட ராம்ஜி
10 பிப்,2017 - 11:02 IST
மனதில் உறுதி வேண்டும், மடிப்பாக்கம் மாதவன் தொடர்களில் நடித்த ராம்ஜி தற்போது ஜி தமிழில் ஒளிபரப்பாகும் டார்லிங் டார்லிங் தொடரில் நடித்து வருகிறார்.
ராம்ஜி அடிப்படையில் டான்சர். காதல் கோட்டை படத்தில் இடம்பெற்ற "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா..." பாடல் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். அதன் பிறகு பல படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார். பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றினார். பல நடன நிகழ்ச்சிகளை நடத்தினார். பல படங்களில் குணசித்தர வேடங்களில் நடித்தார். சில படங்களில் இரண்டாவது நாயகனாக நடித்தார், வில்லனாகவும் நடித்தார். பல கேரக்டர்களில் நடித்து போராடியும் அவரால் சினிமாவில் ஜெயிக்க முடிவில்லை. அதன் பிறகு சின்னத்திரைக்கு வந்தார்.
தற்போது சின்னத்திரையில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தாலும் அவருக்குள் இருக்கிற சினிமா ஆசை தீரவில்லை. நல்ல ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இவரது மனைவி அமிர்தா ராம் சினிமாவில் காஸ்ட்டியூம் டிசைனராக இருக்கிறார். பல படங்களில் பணியாற்றியுள்ள அமிர்தா ராம். தற்போது வெற்றி மாறன் இயக்குனம் வடசென்னை படத்தின் காஸ்டியூம் டிசைனராக இருக்கிறார். கணவர் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பது அமிர்தாவுக்கும் லட்சியமாக இருக்கிறது.
0 comments:
Post a Comment