Thursday, February 9, 2017

5 வருடங்களாக தலையில் முடிவளர்த்து வருகிறேன்! -நடிகர் ரவிசங்கர்


5 வருடங்களாக தலையில் முடிவளர்த்து வருகிறேன்! -நடிகர் ரவிசங்கர்



10 பிப்,2017 - 09:40 IST






எழுத்தின் அளவு:








சிவரகசியம், பொம்மி பிரண்ட்ஸ் உள்பட சில சீரியல்களில் நடித்து வருபவர் ரவிசங்கர். அதோடு, சினிமாவிலும் பல படங்களில் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து வரும் அவரது உயரம் 4.2 அடியாகும். என்றாலும் இந்த உயரமே தனக்கு நடிக்க வாய்ப்புகளை பெற்றுத்தருவதாக சொல்கிறார் ரவிசங்கர்.

அதுகுறித்து அவர் கூறுகையில், விக்ரம் நடித்த அந்நியன் படம் பார்த்த பிறகுதான் நான் தலையில் முடி வளர்க்கத் தொடங்கினேன். காரணம் எனது உயரம் 4.2 அடி. உயரம் குறைவு என்பதால் ஏதாவது வித்தியாசமான கெட்டப்பில் இருந்தால்தான் நடிக்க சான்ஸ் தருவார்கள் என்பதால் தலையில் முடி வளர்க்கத்தொடங்கினேன். அதைப்பார்த்துதான் சுட்டி டிவியில் ஒளிபரப்பான பொம்மி பிரண்ட்ஸ் சீரியலில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன்பிறகு வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் அமைச்சர் வேடத்தில் நடிக்கவும் அந்த முடி பயன்பட்டது. அதேபோல் சிவரகசியம் சீரியலிலும் வாய்ப்புக்கிடைத்தது.

அதனால் தொடர்ந்து தலைமுடியை பராமரித்தபடி நடித்து வருகிறேன். ஏற்கனவே மதுரைவீரன், மாட்டுத்தாவணி, புலிவருது, சோழநாடு, கூட்டாளி, ஆறு சக்கர குதிரை உள்பட பல படங்களில் நடித்துள்ள எனக்கு சில படங்களில் காமெடி வேடம் கிடைத்தாலும், சில படங்களில் வில்லத்தனமான கேரக்டரும் கொடுத்திருக்கிறார்கள். இதெல்லாம் தலையில் நீண்ட முடியுடன் நான் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் இருப்பதால்தான் கிடைக்கிறது. அதனால்தான் கடந்த 5 வருடங்களாக தலையில் நீண்ட முடி வளர்த்து அதை பராமரித்து வருகிறேன் என்கிறார் நடிகர் ரவிசங்கர்.


0 comments:

Post a Comment