ஷாரூக்கான், ஆமீர்கான் இணைந்த முதல் புகைப்படம்
11 பிப்,2017 - 17:23 IST
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களான ஷாரூக்கான், ஆமீர்கான் இருவரும் இணைந்து முதல் முறையாக ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளனர். ஒரு புகைப்படத்தை எடுக்கவே அவர்களுக்கு 25 வருடங்கள் ஆகியிருக்கிறது.
இது பற்றி ஷாரூக்கான அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “25 வருடங்களாக இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியும். ஆனால், நாங்கள் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம் இது. ஒரு உற்சாகமான இரவு,” என ஷாரூக் கூறியுள்ளார்.
இந்த ஒரு பதிவை மட்டும் 46000 பேர் லைக் செய்துள்ளனர், 12,000 பேர் ரிடிவீட் செய்துள்ளனர், 3000 பேர் பதிலளித்துள்ளனர். துபாயில் ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட போது இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் நேற்று முதலே வைரலாகப் பரவி வருகிறது.
0 comments:
Post a Comment