அருள்நிதியின் புதிய படம் இரவுக்கு ஆயிரம் கண்கள்
11 பிப்,2017 - 13:20 IST
டிமாண்டி காலனிக்கு பிறகு அருள்நிதிக்கு சரியான படங்கள் அமையவில்லை. நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், ஆறாது சினம் படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. தற்போது பிருந்தாவனம் படத்தில் நடித்து வருகிறார். இதனை ராதாமோகன் இயக்குகிறார், மாஜி ஹீரோ ரவிச்சந்திரன் பேத்தி தன்யா அருள்நிதி ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதனை புதுமுக இயக்குனர் மு.மாறன் இயக்குகிறார்.
"பொதுவாகவே இரவை விட பகலுக்கு தான் அதிக விழிகள் இருக்கிறது என்று நாம் அனைவரும் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இரவுக்கு தான் ஆயிரம் கண்கள் இருக்கின்றது. கதைக்கும் இரவில் நடைபெறும் பல மர்மங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதால், இரவுக்கு ஆயிரம் கண்கள் என்று தலைப்பு வைத்துள்ளோம். ஒரு பிரச்சனையில் இருந்து ஒரு சராசரி மனிதன் எப்படி வெளியே வருகிறான் என்பது தான் இந்த படத்தின் ஒரு வரி கதை. ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்டு கதை நகர்வதால், விறுவிறுப்பிற்கு எந்த விதத்திலும் குறை இருக்காது. வருகிற மார்ச் 25 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை துவங்க இருக்கின்றோம். படத்தில் பணியாற்ற இருக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து வருகிறோம். எனகிறார் இயக்குநர் மு மாறன்.
0 comments:
Post a Comment