Saturday, February 11, 2017

மீண்டும் சென்னையில் குடியேறுகிறார் பிரபுதேவா


மீண்டும் சென்னையில் குடியேறுகிறார் பிரபுதேவா



11 பிப்,2017 - 15:59 IST






எழுத்தின் அளவு:








நயன்தாரா உடன் காதல் ஏற்பட்ட விவகாரத்துக்கு பிறகு மனைவி ரமலத்தை விவாகரத்து செய்த பிரபுதேவா மும்பையிலேயே செட்டிலானார். அங்கு செட்டிலான பிறகு பாலிவுட்டில் சில படங்களை இயக்கிய பிரபுதேவாவினால் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. தற்போதும் மும்பையிலேயே வசிக்கும் பிரபுதேவா மீண்டும் சென்னையில் குடியேற திட்டமிட்டுள்ளார். அதனால்தான் தமிழில் படங்களை தயாரிப்பதிலும், நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

'தேவி' படத்தை தொடர்ந்து பிரபு தேவா கதாநாயகனாக நடிக்கும் படம் 'எங் மங் சங்'. இந்தப் படத்தை வாசன் விஷுவல்ஸ் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அது மட்டுமல்ல, தன்னை வைத்து களவாடிய பொழுதுகள் படத்தை இயக்கிய தங்கர் பச்சானுக்கு எங் சங் மங் படத்தில் தன்னுடைய அப்பாவாக நடிக்க சான்ஸ் கொடுக்க வைத்திருக்கிறார் பிரபு தேவா.

அறிமுக இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். பிரபு தேவா குங்ஃபூ மாஸ்டராக நடிப்பதை வைத்து 'எங் மங் சங்' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தலைப்புடன் படம் வெளிவரும்போது ஒருவேளை யு சான்றிதழ் கிடைத்தாலும் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது. எனவே முன் எச்சரிகையாக 'எங்க நாராயணன், மங்களம், சங்கர்' என்று 'எங் மங் சங்' என்ற தலைப்புக்கு தமிழ்ப்பெயரை கைவசம் வைத்துள்ளனர். அரசாங்கத்துக்கு எப்படி அல்வா கொடுக்கணும் என்பதை சினிமாக்காரர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.


0 comments:

Post a Comment