Wednesday, February 1, 2017

வருமான வரி சோதனை, கலக்கத்தில் தெலுங்குத் திரையுலகம்


வருமான வரி சோதனை, கலக்கத்தில் தெலுங்குத் திரையுலகம்



01 பிப்,2017 - 15:29 IST






எழுத்தின் அளவு:








திரையுலகத்தையும், வருமான வரி சோதனையையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. இந்தியா முழுவதிலும் உள்ள திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்தப் படத்தைப் பார்க்க வரும் மக்கள் அதிகப்படியான டிக்கெட் கட்டணங்களால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் பொழுது போக்குகளில் முதன்மையானதாக இருப்பது திரைப்படங்களைப் பார்ப்பதுதான். ஆனால், டிக்கெட் கட்டணங்களைக் குறைக்கும் நடவடிக்கை பற்றியும், தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதைப் பற்றியும் மட்டும் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் வாய் திறந்து பேச மாட்டார்கள்.

சமீப காலமாக தங்களது படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளியது என்பதைப் பெருமையாக நினைக்கும் பலரும், அவ்வளவு வசூல் வரவில்லை என்றால் கூட பொய்யாகவே 100 கோடி ரூபாய் வசூலித்துவிட்டது என்று சொல்லி வருகிறார்கள். அதிலும் 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நவம்பர் மாதம் வந்த பிறகு திரையுலக வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கணக்கில் வராத பல கோடி ரூபாய்களை மாற்ற திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் தவித்தார்கள் என்ற செய்தியும் வெளியானது.

இருந்தாலும் தெலுங்குத் திரையுலகத்தில் பொங்கல் சமயத்தில் வெளியான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்களின் வசூல் 100 கோடி ரூபாய் அளவில் இருந்ததாக அவர்களே செய்திகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரின் படங்களைத் தயாரித்தவர்களின் வீடுகள், வினியோகஸ்தர்கள், நடிகர்கள் என பலரது வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மேலும் பலரது வீடுகளிலும் நடைபெறலாம் என்றும் சொல்கிறார்கள்.

அந்த வருமான வரி சோதனை அப்படியே தமிழ்நாட்டுக்கும் வரலாம் என்கிறார்கள். இங்கும் கடந்த சில நாட்களாக 100 கோடி ரூபாய் வியாபாரம் என்பது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் சில லட்சம் ரூபாய் வாங்கிய கடனைக் கூட திருப்பிச் செலுத்த முடியாத விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்க, மறுபக்கம் தாங்கள் சம்பாதித்த பல கோடி ரூபாய்களை பாதுகாத்துக் கொள்ள திரையுலகத்தினர் போராடி வருகிறார்கள் என சமூக வலைத்தளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.


0 comments:

Post a Comment