'வின்னர்' பட பாடலை வெளியிடும் மகேஷ் பாபு
01 பிப்,2017 - 16:21 IST
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சாய் தரண் தேஜ் ஹீரோவாக நடிக்கும் வின்னர் படத்தின் பாடலை வெளியிடவுள்ளார். சித்தாரா என தொடங்கும் அப்பாடலை மகேஷ் பாபுதான் வெளியிட வேண்டும் என இயக்குனர் மற்றும் படக்குழுவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர் காரணம் மகேஷ் பாபுவின் செல்ல மகளின் பெயர் சித்தாரா. இதற்கு மகேஷ் பாபுவும் சம்மதம் தெரிவித்து விட்டாராம். இன்று(பிப் 1) இரவு 7 மணிக்கு மகேஷ் பாபு சித்தாரா சிங்கிள் ட்ராக்கை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாய் தரண் தேஜிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் கோபிசந்த் இயக்கியுள்ளார். தெலுங்கு தொலைக்காட்சி பிரபலமும் நடிகையுமான அனுஷ்யா பரத்வாஜ் இப்படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார். தாகூர் மதுவின் லக்ஷ்மி நரசிம்ஹா புரொடக்ஷனுடன் இணைந்து நல்லமலுபு புஜ்ஜி இப்படத்தை தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
0 comments:
Post a Comment