கன்னட திரை உலகில் கால் பதிக்கும் யுவன் சங்கர் ராஜா
01 பிப்,2017 - 16:28 IST
இசைஞானி இளையராஜாவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா கன்னட திரைப்படம் ஒன்றிற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் முன்னனி இசையமைப்பாளராக ஜொலித்த யுவன் சங்கர் ராஜாவிற்கு இடையில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. தற்போது மீண்டும் பழைய வேகத்துடன் புதுபடங்களுக்கு யுவன் இசையமைக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் தனது முதல் கன்னட திரைப்படம் குறித்து யுவன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அறிமுக இயக்குனர் ரச்சன் சந்திரா இயக்கும் கௌட்ரு ஹோட்டல் எனும் தனது முதல் கன்னட படத்திற்கு தான் இசையமைக்கவுள்ளதாக யுவன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment