Wednesday, February 1, 2017

ஜிவி பிரகாஷ் ஜோடியாக மகிமா நம்பியார்!


ஜிவி பிரகாஷ் ஜோடியாக மகிமா நம்பியார்!



02 பிப்,2017 - 09:06 IST






எழுத்தின் அளவு:








விஜய்சேதுபதியைப் போன்று தமிழில் அதிகப்படங்களில் நடித்து வரும் இன்னொரு ஹீரோ ஜி.வி.பிரகாஷ்குமார். கடவுள் இருக்கான் குமாரு படத்தைத் தொடர்ந்து அவரது நடிப்பில் புரூஸ்லீ திரைக்கு வரதயார் நிலையில் உள்ளது. அதையடுத்து 4ஜி, அடங்காதே, சர்வம் தாள மயம், ஷார்ப், ஐங்கரன் என நான்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் ரவி அரசு இயக்கத்தில் நடிக்கும் ஐங்கரன் படத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக உருவெடுக்கிறார் ஜி.வி.பிர காஷ்.

மேலும், இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், காதலும் கடந்து போகும் படத்தில் நடித்த மடோனா செபஸ்டியனிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் தற்போது மகிமா நம்பியாரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். சாட்டை, என்னமோ நடக்குது படங்களைத் தொடர்ந்து அருண்விஜய்க்கு ஜோடியாக குற்றம் 23 படத்தில் நடித்துள்ள மகிமா நம்பியார் இந்த படத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவியாக நடிக்கிறாராம். அதோடு, முந்தைய படங்களை விட ஓரளவு கவர்ச்சிகரமாக மாடர்ன் கெட்டப்பில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.


0 comments:

Post a Comment