Wednesday, February 1, 2017

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது நல்லதொரு ஆரம்பம்! - பவன் பேட்டி


வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது நல்லதொரு ஆரம்பம்! - பவன் பேட்டி



02 பிப்,2017 - 08:49 IST






எழுத்தின் அளவு:








கதாநாயகன், வில்லன், குணசித்ர நடிகர், காமெடியன் என பலமுகம் காட்டி வருபவர் பவன். எந்த மாதிரியான வேடமென்றாலும் அதை முழுமையாக செய்து கைதட்டல் பெறுபவர். தற்போது வெற்றிமாறனின் வடசென்னை உள்பட பல படங்களில் வெயிட்டான வேடங்களில் நடித்து வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...

தற்போது நடித்து வரும் படங்கள் பற்றி?

லிங்குசாமி இயக்கிய ஜீ படத்தில்தான் நான் அறிமுகமானேன். அதன்பிறகு திமிரு, கலாபக்காதலன், பொல்லாதவன், குருவி, மாசிலாமணி, தகராறு என பல படங்களில் நடித்தேன். அதில் பொல்லாதவன் படத்தில் நடித்த அவுட் என்ற கேரக்டர் நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. இப்போதுவரை அவுட் என்றுதான் என்னை அழைக்கிறார்கள். அந்த படம்தான் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அப்படி எனக்கு திருப்புமுனை கொடுத்த வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் வடசென்னை படத்திலும் நடித்து வருகிறேன். அது எனக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, கிருமி கதிர் நடிக்கும் சத்ரு மற்றும் கள்வர்கள், மலையாளத்தில் ஜெயராம் நடிக்கும் சத்யா என பல படங்களில் நடிக்கிறேன். மலையாளத்தில் ஏற்கனவே நான் பல படங்களில் அழுத்தமான வேடங்களில் நடித்திருக்கிறேன்.

வடசென்னையில் எந்த மாதிரியான கதாபாத்திரம்?

நான் நடிப்பது எந்த மாதிரியான வேடம் என்பது எனக்கு இன்னும் முழுமையாக தெரியாது. ரொம்ப லைவான கதாபாத்திரம். ஸ்பாட்டில் டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதன்படி நடித்து வருகிறேன். அதோடு பொல்லாதவனில் எனக்கு நல்ல வேடம் கொடுத்தவர் வெற்றிமாறன். அதனால் அவர் எந்த வேடம் கொடுத்தாலும் நம்பி நடிக்கலாம். எனக்கு தெரிந்து சினிமாவை தவிர வேறு எதைப்பற்றியும் அனாவசியமாக பேச மாட்டார். 24 மணி நேரமும் சினிமாவைப் பற்றிதான் பேசுவார். தொழில் சம்பந்தமாக பேசும் நல்ல மனிதர். எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது. அப்படியொரு நல்ல டைரக்டர் படத்தில் மறுபடியும் நடிப்பது மகிழ்ச்சி.

தற்போது தமிழ் சினிமாவில் சரியான வில்லன் நடிகர் இல்லையே?

பிரகாஷ்ராஜ்க்கு பிறகு இவர்தான் வில்லன் என்று சொல்லும் அளவுக்கு யாருமே இல்லை. நானும் இப்போது நெகடீவ் ரோல்களில் அதிகமாக நடிக்கிறேன். ஆனபோதும், சமீபகாலமாக புதிது புதிதாக நடிகர்களை நடிக்க வைக்கிறார்கள். ரஜினி சார் நடித்த கபாலி படத்தில் எத்தனை பேர் தெரிந்த நடிகர்கள் இருந்தார்கள். பெரிய நடிகர்கள் யாருமே இல்லை. ஆடியன்ஸ் இந்த மாதிரிதான் வேண்டும் என்று கேட்பதில்லை. சினிமாக்காரர்களாக முடிவெடுத்து அப்படி செய்கிறார்கள். குறும்படங்கள் எடுத்தவர்கள் படமெடுக்க வந்தபிறகுதான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, குறும்படங்களில் நடித்து வந்த விஜயசேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் குறும்பட டைரக்டர்கள் மூலமாகவே வந்தனர். ட்ரெண்ட் அப்படியாகி விட்டது. என்னதான் இருந்தாலும் ஆடியன்ஸ் பெமிலியர் ஆர்ட்டிஸ்ட்டை படங்களில் பார்க்கத்தான் விரும்புகிறார்கள். மக்கள் எந்த டைரக்டரிடமும் புதியவர்களாக நடிக்க வையுங்கள் என்று சொல்வதில்லையே. இதெல்லாமே சினிமாக்காரர்கள் செய்வதுதான். இதுபோன்ற விசயங்களால் எங்களைப்போன்றவர்களுக்கு எதிர்பார்த்தபடி படங்கள் கிடைப்பதில்லை.

டைரக்டராகும் எண்ணம் உள்ளதா?

அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை. கடைசி வரை நான் நடிகன் தான். இந்த இடத்தில் நான் இன்னொரு விசயத்தையும் சொல்லியாக வேண்டும். அதாவது, நான் சூரியன் சட்டக்கல்லூரி என்றொரு படத்தில் நடித்தேன். அந்த பட டைரக்டர் பெயரும் பவன். படம் ஹிட்டானால் என் பெயர். இல்லையென்றால் உங்கள் பெயர்தான் என்று சொன்னார். படம் ஓடவில்லை என்றதும், அய்யோ நான் கிடையாதுங்க, நடிகர் பவன்தான் அந்த படத்தை இயக்கினார் என்று சொல்லிவிட்டார். அதைப்பார்த்து, அவர்தான் டைரக்டராகி விட்டாரே. இனிமேல் நடிக்க வரமாட்டார் என்று பலரும் முடிவு செய்து விட்டார்கள். யாரும் நம்மகிட்ட வந்து கேட்ககூட மாட்டார்கள். தெரிந்தவர்கள் வந்து விடுவார்கள். தெரியாதவர்கள் எப்படி வருவார்கள்.

மேலும், 3 படங்களில் ஹீரோவாக நடித்தேன். அது க்ளிக்காகியிருந்தால் தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடித்திருப்பேன். படங்கள் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. அதற்காக சினிமாவை விட்டு வெளியேற முடியாது. ஏதாவது பண்ணித்தானே ஆக வேண்டும். அதனால்தான் கிடைக்கிற வேடங்களில் நடித்து வருகிறேன். இருப்பினும் கூடிய சீக்கிரமே சினிமாவில் எனக்கென ஒரு இடத்தை பிடித்து விடுவேன். குறிப்பாக, வெற்றிமாறனின் வடசென்னை படம் கிடைத்திருப்ப தெல்லாம் நல்லதொரு ஆரம்பம்தான். அதனால் வெகுவிரைவில் எனது சினிமா மார்க்கெட் பரபரப்பாகி விடும் என்று நம்புகிறேன் என்கிறார் பவன்.


0 comments:

Post a Comment