Wednesday, February 1, 2017

அல்லு அர்ஜூனின் படப்பிடிப்பில் இன்ப அதிர்ச்சி தந்த ரோஹித் ஷெட்டி


அல்லு அர்ஜூனின் படப்பிடிப்பில் இன்ப அதிர்ச்சி தந்த ரோஹித் ஷெட்டி



02 பிப்,2017 - 09:53 IST






எழுத்தின் அளவு:








அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் டீஜே படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ரமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகின்றது. படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்த பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி படக்குழுவினரை சந்தித்துப் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். டீஜே இயக்குனர் ஹரீஷ் சங்கரின் நெருங்கிய நண்பரான ரோஹித்தின் சந்திப்பை ஹரீஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் டீஜே படத்தின் 50% படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாம் விரைவில் இப்படத்தின் பஸ்ட் லுக் டீசர் வெளியாகும் என கூறப்படுகின்றது. தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகின்றார். டீஜே படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.


0 comments:

Post a Comment