Thursday, February 9, 2017

சசிகலாவுக்கு சப்போர்ட் வேண்டாம் – நடிகர் விசு

visu and sasikalaதமிழக முதல்வர் ஆவதற்கு சசிகலாவை ஆதரிக்க வேண்டாம் என இயக்கனர் விசு கூறியுள்ளார்.


“எங்க வாழ்க்கை உங்க கையில் இருக்கிறது எம்.எல்.ஏ.க்களே…


கண்டிப்பாக முதல்வர் ஓ.பி.எஸ்.ஸிற்கு சப்போர்ட் செய்யுங்கள். சசிகலாவிற்கு சப்போர்ட் வேண்டாம்.


நான் ஜெயா டிவியில் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியை நடத்திய போது ஒரே ஒரு தடவை மட்டும் தான் மேடம் ஜெ.வைச் சந்தித்தேன்.


அதன் பிறகு என்னை சந்திக்க விடவில்லை. யார் யாரோ வருவார்கள். இப்போது சசிகலாவை ஆட்சி அமைக்க விட்டாலும் அதே தான் நடக்கும்.


ஆளுநர் 5 மணிக்கு முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அனுமதி அளித்துள்ளார். 5 என்றால் பஞ்ச பூதங்கள் உள்பட நல்ல விஷயங்கள்.


அதுவே சசிகலாவுக்கு ஏழரை மணிக்கு. ஏழரை என்றால் என்ன என்று உங்களுக்கே தெரியும்”

என்றார் திரைப்பட இயக்குநர் விசு.

0 comments:

Post a Comment