
தெலுங்கிலும் இந்த படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.அங்கு சூர்யாவின் ‘சிங்கம்-3’ படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விசாகபட்டினம் தான் கதை களம். எனவே, தெலுங்கு ரசிகர்கள் இந்த படத்தை நேரடி தெலுங்கு படம் போலவே ரசிக்கிறார்கள்.
தற்போது ஆந்திரா, தெலுங்கு தேசத்தில் நாகார்ஜுனா நடித்த ‘ஓம் நமோ வெங்கடேசா’ படம் திரைக்கு வந்திருக்கிறது. இதற்கு போட்டியாக ‘சி-3’ பார்க்கப்பட்டது. என்றாலும், நாகார்ஜுனா படத்துக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போதைய நிலையில் நாகார்ஜுனா படத்தை விட சூர்யாவின் ‘சி-3’ படத்துக்கு அங்குள்ள ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்து இருக்கிறது. வசூலிலும் நாகார்ஜுனாவை சூர்யா முந்திவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment