Friday, February 3, 2017

உதம் சிங் வாழ்க்கை வரலாற்றில் ரன்பீர்.?


உதம் சிங் வாழ்க்கை வரலாற்றில் ரன்பீர்.?



03 பிப்,2017 - 14:50 IST






எழுத்தின் அளவு:








பாலிவுட்டில் இப்போது பயோபிக் சீசன் தலை தூக்கியுள்ளது. தொடர்ச்சியாக பயோபிக் படங்கள் அதிகளவில் வெளியாகி வெற்றியும் பெற்று வருவதால் பாலிவுட்டின் பல இயக்குநர்கள் பலரின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக மாற்றி வருகிறார்கள். அந்தவகையில் இயக்குநர் சுஜித் சிர்கர், சுதந்திர போராட்ட வீரர் உதம் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளார். யார் இந்த உதம் சிங்...? ஒரு சின்ன பிளாஷ்பேக்...

பஞ்சாப் மாநிலத்தில் 1899-ம் ஆண்டு டிச., 26ம் தேதி பிறந்தவர் உதம் சிங். சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து அநாதை இல்லத்தில் தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன்பின்னர் தன்னை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்தி கொண்டவர். இந்திய சுதந்திர வரலாற்றில் ஒரு முக்கிய சம்பவமான ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தின் போராட்டத்தில் பங்கேற்று, அந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமானவர் ஜெனரல் ஓ.டயர். அவரை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று துடித்த உதம் சிங், லண்டனில் நடந்த ஒரு கூட்டத்தில் டயரை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். அதன்பின் இந்த குற்றத்திற்காக அவர் தூக்கிலடப்பட்டார்.

தற்போது இயக்குநர் சுஜித், உதம்மின் வாழ்க்கையை படமாக எடுக்க முடிவு செய்து கதை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதில் நடிகர் ரன்பீரை நடிக்க வைக்க எண்ணியுள்ளார். இது தொடர்பாக சுஜித், ரன்பீரிடம் பேசி வருகிறார். விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 comments:

Post a Comment