சுதா சந்திரனுக்கு பதிலாக கலக்கும் ரூபாஸ்ரீ
03 பிப்,2017 - 11:47 IST
90ளில் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்தவர் ரூபாஸ்ரீ. எங்க வீட்டு வேலன், இதய நாயகன், பொண்டாட்டியே தெய்வம், டூயட், எல்லாமே என் ராசதான் படங்களில் நடித்தார். சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும் சின்னத்திரைக்கு வந்தார்.
அம்பிகை தொடர் மூலம் சீரியல் நடிகை ஆனார். மைடியர் பூதம், அகல்யா, உதிரிப்பூக்கள், வாணி ராணி உள்பட பல சீரியல்களில் நடித்தவர். தற்போது விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்து வருகிறார். தெய்வம் தந்த வீடு தொடரில் இருந்து சுதா சந்திரன் விலகிய பிறகு அந்த கேரக்டரில் ரூபாஸ்ரீ நடிக்கிறார், இதற்கு முன்பக தெய்வம் தந்த வீடு தொடரின் மலையாள வெர்ஷனான சந்தனமழாவில் நடித்தார். இப்போது அதே கேரக்டரை தமிழில் நடிக்கிறார்.
20 படங்களில் ஹீரோயினாக நடித்தவர், 10க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்து முடித்து விட்டார். சுதா சந்திரன் இடத்தை மிக எளிதாக பிடித்துவிட்டார். தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் நடிக்கும் அழகான மாமியார். அடுத்து சினிமாவிலும் குணச்சித்திர ரோலில் தலை காட்ட இருக்கிறார்.
0 comments:
Post a Comment