Saturday, February 4, 2017

தமிழ் இயக்குனர்களால் எனக்கு நிறைய பாதிப்பு: ராதிகா ஆப்தே பரபரப்பு புகார்


தமிழ் இயக்குனர்களால் எனக்கு நிறைய பாதிப்பு: ராதிகா ஆப்தே பரபரப்பு புகார்



04 பிப்,2017 - 10:03 IST






எழுத்தின் அளவு:








பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த டோனி படத்தின் மூலம் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. மராட்டிய நாடக நடிகையான இவர் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு வெற்றிச் செல்வன் என்ற படத்தில் நடித்தார். பிறகு இந்திப் பக்கம் போய்விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நடித்தார். சமீபத்தில் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தார்.

இந்தநிலையில் வட இந்திய மீடியாக்களுக்கு பேட்டி அளித்துள்ள ராதிகா ஆப்தே தமிழ் இயக்குனர்கள் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். கபாலி படம் படம் தவிர வேறு எந்தப் படத்திலும் எனக்கு மரியாதை தரவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:

தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்குதான் மதிப்பு. அவர்களுக்குதான் நட்சத்திர ஓட்டலில் ரூம் கொடுப்பார்கள். நடிகைகளுக்கு சாதாரண ஓட்டலில் ரூம் தருவார்கள். நடிகர்கள் எவ்வளவு தாமதமாக வந்தாலும் எதுவும் கேட்கமாட்டார்கள். ஆனால் நடிகை படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ஸ்பாட்டில் இருக்க வேண்டும் என்பார்கள். இது மாதிரி நிறைய விஷயங்கள் நடக்கும். இதனால் நான் பாதிப்படைந்திருக்கிறேன். ரஜினியும், கபாலி இயக்குனர் ரஞ்சித்தும் மட்டுமே என்னை மதித்தார்கள். எல்லோரையும் நான் குற்றம் சாட்டவில்லை நான் பணியாற்றிய படங்களின் அனுபவங்களை வைத்தே இதனை சொல்கிறேன். என்று கூறியுள்ளார், ராதிகா ஆப்தே.


0 comments:

Post a Comment