Saturday, February 18, 2017

நடிகையிடம் சில்மிஷம் மர்ம நபர்களுக்கு வலை


நடிகையிடம் சில்மிஷம் மர்ம நபர்களுக்கு வலை



19 பிப்,2017 - 09:03 IST






எழுத்தின் அளவு:








கேரளாவில், பிரபல நடிகை பாவனாவின் காரை மடக்கி, அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இங்கு, இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இந்நிலையில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில். நடித்து வரும், நடிகை பாவனா, படப்பிடிப்பு முடித்து, வீடு திரும்பினார். அப்போது, அவரது காரை வழிமறித்த மர்ம கும்பல், அவரை, காரிலிருந்து வெளியே இறங்கச் சொல்லி, சில்மிஷத்தில் ஈடுபட்டது.

மொபைல் போனில், பாவனாவை பல்வேறு கோணங்களில் படம் பிடித்த அந்த கும்பல், இதுகுறித்து, போலீசில் புகார் அளித்தால், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வோம் என மிரட்டியது. இதனால், கடும் மன உளைச்சல் அடைந்த பாவனா, சம்பவம் குறித்து, போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், பாவனாவின் கார் டிரைவரை கைது செய்தனர்.

பாவனாவிடம் தற்காலிக டிரைவராக பணியாற்றி வரும் மார்ட்டினிடம் நடத்திய விசாரணையில், பாவனாவிடம் சில்மிஷம் செய்த நபர்களுடன், அவன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. தப்பிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். பாவனா மீதான பலாத்காரத்திற்கு, சக நடிகையர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


0 comments:

Post a Comment