நடன இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட வருண் தவான்
19 பிப்,2017 - 11:18 IST
பாலிவுட் படமான பத்ரிநாத் கி துல்ஹனியா படத்தில் இடம்பெற்றுள்ள தம்மா...தம்மா என்ற பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றள்ளது. பத்ரிநாத் கி துல்ஹனியா படம் இந்த ஆண்டு மார்ச் 10 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த பாடல் தற்போது மறுபதிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால் நடன இயக்குனர் சரோஜ் கான் மிகுந்த அப்செட்டில் உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. பத்ரிநாத் கி துல்ஹனியா படத்தின் பாடல் புரோமோஷன் நிகழ்வுகளில் ஈடுபட படக்குழுவினர் தன்னை அனுமதிக்காதது தான், சரோஜ் கானின் அப்செட்டிற்கு காரணமாம். சமீபத்தில் இந்த விவகாரம் பற்றி நடிகர் வருண் தவானிடம் மீடியாக்கள் கேட்டன. அப்போது பதிலளித்த வருண், சரோஜ் அம்மாவிடம் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஆனால் அது என்ற கையில் இல்லை. அவரது நம்பரும் என்னிடம் இல்லை. தனிப்பட்ட முறையிலும் அவரை எனக்கு தெரியாது. அவரது நம்பரை வங்கித் தருமாறு எனது தந்தை டேவிட் தவானிடம் கேட்டுள்ளேன். ஆனால் தற்போது அவர் லண்டன் சென்றுள்ளார். ஆனால் இது காரணம் இல்லை என எனக்கு தெரியும். சரோஜை எனது முன்னோடியாக எடுத்துக் கொள்ளேன். அவரது ஒவ்வொரு பாடலையும் நான் அப்படி தான் நினைக்கிறேன் என்றார்.
0 comments:
Post a Comment