தமிழுக்கு வரும் இன்னொரு மலையாள ஹீரோ..!
19 பிப்,2017 - 10:28 IST
மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு கதாநாயகிகள் படையெடுப்பதுபோல மலையாள ஹீரோக்கள் இங்கே வருவது மிகவும் குறைவுதான்.. காரணம் தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் பற்றாக்குறை, தவிர அவர்களுக்கு சம்பளம் அங்கே ரொம்பவும் குறைவு.. அதனால் அவர்கள் தமிழ், அதன்பின் தெலுங்கு என ரவுண்டு கட்டுகின்றனர்..ஆனால் மலையாள ஹீரோக்களை பொறுத்தவரை சம்பல் குறைவென்றாலும் கூட வருடத்திற்கு ஆறு படங்களிலாவது நடித்து விடுவதால் மலையாள திரையுலகமே போதும் என நின்று விடுகிறார்கள்.. ஆனால் நம்ம ஊர் இயக்குனர்கள் தான் அவர்களின் திறமையை பார்த்து வியந்து தமிழ்ப்படங்களில் கதாநாயகர்களாகவோ அல்லது முக்கிய வேடங்களிலோ நடிக்க வைக்கிறார்கள்..
இதனால் அவரகளது டப்பிங் மார்க்கெட் வேல்யூ கூடுவதும் உண்மை.. பிருத்விராஜ், நிவின்பாலி, துல்கர் சல்மான் போனறவர்கள் எல்லாம் அப்படி வந்தவர்கள் தான். மம்முட்டியின் தம்பி மகன் மக்பூல் சல்மானும் கூட இப்போது தமிழில் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
இந்த வரிசையில் அடுத்ததாக இடம்பிடித்துள்ள மலையாள நடிகர் டொவினோ தாமஸ்.
சமீபத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'எஸ்றா' வெளியான தியேட்டர்களில் இவரது 'கோதா' மற்றும் 'ஒரு மெக்சிகன் அபராதா' ஆகிய படங்களின் ட்ரெய்லர்கள் திரையிடப்படும் அளவுக்கு தற்போது மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர் இவர். இவரை தமிழுக்கு கதாநாயனாக அழைத்து வருபவர் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பி.ஆர்.விஜயலட்சுமி தான். முழுக்க முழுக்க காதல் கதையாக இந்தப்படம் உருவாகிறது.
0 comments:
Post a Comment