திருப்பதியில் வழிபாடு செய்த சுனில்
21 பிப்,2017 - 10:14 IST
நகைச்சுவை நடிகராக ஜொலித்து தற்போது நாயகனாக மாறியுள்ள நடிகர் சுனில் திருப்பதி சென்று வழிபாடு செய்துள்ளார். வருமானவரி துறை அதிகாரி சுஷில் சந்திராவுடன் இணைந்து சிறப்பு தரிசன வழியில் திருப்பதியில் பெருமாளை தரிசித்த சுனிலுக்கு தேவஸ்தான ஊழியர்கள் பிரசாதம் வழங்கியுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் சுனில் அப்படத்திற்கு பின்னர் மலையாளத்தில் வெற்றி பெற்ற டூகன்ட்ரீஸ், படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இயக்குனர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் விரைவில் துவங்கவுள்ள இப்படத்தில் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதர் சஞ்சனா கல்ராணி முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment