பாலா படத்தில் ஜோதிகா நடிப்பது உறுதி
21 பிப்,2017 - 11:28 IST
நந்தா, பிதாமகன் படங்கள் மூலம் சூர்யாவுக்கு அடுத்தடுத்த உயரங்களை பெற்றுக் கொடுத்தவர் பாலா. அதன்பிறகு கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்து விட்டாலும் "பாலா எப்போது கூப்பிட்டாலும் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு அவர் படத்தில் நடிக்க போய்விடுவேன்" என்று சூர்யா கூறுவார். ஒரு நாள் ஒரு விழாவில் பாலாவும், சூர்யாவும் சந்தித்தபோது "எனக்கு ஒரு கதை பண்ணுங்க மீண்டும் இருவரும் சேர்ந்து பணியாற்றலாம்" என்று சூர்யா கூறினார். அதற்கு பாலா "உனக்கு ஏற்ற மாதிரி கதையில்லை. உன் மனைவி ஜோதிகாவின் கால்ஷீட் வாங்கிக் கொடு அவருக்கு கதை வைத்திருக்கிறேன்" என்றார். யதேச்சையாக அமைந்த இந்த உரையாடல் இப்போது செயல் வடிவம் பெற்றிருக்கிறது.
பாலாவின் படத்தில் ஜோதிகா நடிக்கிறார். மகளிர் மட்டும் படத்தை முடித்து விட்ட ஜோதிகா, பாலா படத்திற்காக 100 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். பாலா படத்தில் நடிக்க சிவகுமார் குடும்பமும் ஓகே சொல்லிவிட்டது. பாலா இயக்கும் முதல் ஹீரோயின் சப்ஜெக்ட் படம். பாலாவுடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனமும் இதனை தயாரிக்கிறது. மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. மார்ச் மாதத்தில் இதன் படப்பிடிப்புகள் துவங்குகிறது. கார்த்தி, விஷால், ராணா, ஆர்யா நடிக்கும் பிரமாண்ட படத்திற்கு முன்னதாக இந்தப் படத்தை முடிக்க பாலா திட்டமிட்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment