தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளராக செயல்பட்டு வரும் நடிகர் விஷாலுக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் பதவிக்கு போட்டியிட எந்த வித தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கவுன்சிலில் போட்டியிட விஷால் அளித்த மனுவை தேர்தல் அதிகாரியால் ஏற்கப்பட்டதை எதிர்த்து கேயார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் விஷாலின் மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சரியானதே என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரியின் முடிவுகளே இறுதியானது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment