Sunday, February 12, 2017

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடிகர் மனோபாலா ஆதரவு

தமிழகத்தில் ஆட்சியமைப்பது யார் என்பதில் குழப்ப நிலை நீடிக்கும் நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் படையெடுத்த வண்ணம் இருக்கும் நிலையில், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களான ராமராஜன், தியாகு ஆகியோரும் தங்களது ஆதரவை ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மற்றொரு நட்சத்திர பேச்சாளரான மனோபாலாவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தனது ஆதரவை நேரில் சென்று தெரிவித்தார். அப்போது அவர் பேசும்போது, ஒரு தியானம் கலைந்தது. தமிழகம் நிமிர்ந்தது.

என்னைக்கு அண்ணன் வாயைத்திறக்கப் போகிறார் என்று காத்திருந்தேன். அம்மாவின் சமாதியில் தியானத்தில் இருந்து அவர் எப்போது கலைந்து எழுந்தாரோ, அன்று இரவே தமிழகம் முழுவதும் விழித்துக் கொண்டது.

மாண்புமிகு அம்மாவின் புகழை பரப்புவதற்காக ஒவ்வொரு தொகுதியிலும், அவரது திட்டங்களை சொல்லி பிரச்சாரம் செய்துள்ளோம். இப்போதுள்ள சூழ்நிலையில் என்ன முடிவு எடுக்கவேண்டுமோ? அதை யோசித்து சரியான முடிவை எடுத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

இங்கே, வந்தது சிலபேர்தான் என்றாலும், வராதவர்களின் எண்ணங்கள் எல்லாம் இங்கே வரவேண்டும் என்றுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் இன்றைய முதல்வராக மட்டுமில்லாமல் நாளையும் அவர் முதல்வராக ஆவது உறுதி. அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த தமிழகம் காலரை தூக்கிவிட்டு நடக்கலாம் என்றார்.

0 comments:

Post a Comment